/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மொபைல் போன்கள் திருட்டு; மர்ம நபர்கள் துணிகரம் மொபைல் போன்கள் திருட்டு; மர்ம நபர்கள் துணிகரம்
மொபைல் போன்கள் திருட்டு; மர்ம நபர்கள் துணிகரம்
மொபைல் போன்கள் திருட்டு; மர்ம நபர்கள் துணிகரம்
மொபைல் போன்கள் திருட்டு; மர்ம நபர்கள் துணிகரம்
ADDED : ஜூன் 29, 2024 05:53 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியைச் சேர்ந்தவர் நெப்போலியன் மகன் வணங்காமுடி, 26; இவர் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் தனது தாய், தந்தையுடன் வீட்டின் வராண்டாவில் துாங்கிக் கொண்டிருந்தார். காலை 5:30 மணியளவில் எழுந்து பார்த்தபோது அருகில் வைத்திருந்த மொபைல் போனைக் காணவில்லை.
இதேபோன்று, அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா, மணிவண்ணன், சந்திரகாசி ஆகியோரது வீடுகளிலும் மொபைல் போன் திருடு போயுள்ளது.
புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், பதிவான 2 மர்ம நபர்கள் மொபைல் போனை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. அதன் பேரில் போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.