திட்டக்குடி : திட்டக்குடி அருகே காணாமல் போன கல்லுாரி மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி தாய் அளித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த குமாரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் மனைவி பச்சையம்மாள்,40; இவர்களது மூத்த மகள் நந்தினி,20, தேவியாகுறிச்சியிலுள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு முடித்துவிட்டு விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார்.
கடந்த 30ம் தேதி, மாலை 5மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடுதிரும்பவில்லை. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பச்சையம்மாள் புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து காணாமல் போன கல்லுாரி மாணவியை தேடிவருகின்றனர்.