/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள ரயில்வே ஸ்டேஷன் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள ரயில்வே ஸ்டேஷன்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள ரயில்வே ஸ்டேஷன்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள ரயில்வே ஸ்டேஷன்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள ரயில்வே ஸ்டேஷன்
ADDED : ஜூலை 08, 2024 04:35 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு ரயில் நிலையத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
கடலுாரில் இருந்து பண்ருட்டிக்கு செல்லும் ரயில் பாதையில் வரக்கால்பட்டு,நெல்லிக்குப்பம்,மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலையங்கள் உள்ளன.
இங்கு விழுப்புரம் மயிலாடுதுறை இரண்டு மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் மட்டும் தலா மூன்று முறை நின்று செல்லும். இங்கு ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பணியாளர்கள் பணியாற்றினர்.
ஆனால் அகல ரயில் பாதையாக மாற்றியதில் இருந்து வரக்கால்பட்டு,மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலையங்கள் செயல்படவில்லை.ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட எந்த பணிக்கும் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அங்கு நின்று செல்லும் ஒரு சில ரயில்களும் தானாகவே நின்று ஆட்டோமேடிக் சிக்னல் கிடைத்ததும் கிளம்பி செல்கின்றன.
இதுபோன்ற ரயில் நிலையங்களில் தனியார் மூலம் டிக்கெட் மட்டும் விற்பனை செய்ய ரயில்வே துறை ஏற்பாடு செய்துள்ளது.அந்த ஏஜென்டும் ரயில் வரும் நேரத்துக்கு மட்டுமே வருவார். நிரந்த பணியாளர்கள் இல்லாததால் ரயில் நிலையம் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து வருகிறது. குடிநீர் கழிவறை வசதிகள் இல்லை.பணியாளர்கள் இல்லாததால் முடிதிருத்தும் நிலையமாக பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
பஸ் கட்டணத்தை விட குறைவாக ரயில் கட்டணம் உள்ளதால் அதிக மக்கள் பயணம் செய்வதால் டிக்கெட் வழங்குவதற்கு மட்டுமாவது நிரந்தர பணியாளரை நியமிக்க வேண்டும் என பயணிகள் கோரியுள்ளனர்.