/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீட்டில் பதுக்கி வைத்து குட்கா விற்றவர் கைது வீட்டில் பதுக்கி வைத்து குட்கா விற்றவர் கைது
வீட்டில் பதுக்கி வைத்து குட்கா விற்றவர் கைது
வீட்டில் பதுக்கி வைத்து குட்கா விற்றவர் கைது
வீட்டில் பதுக்கி வைத்து குட்கா விற்றவர் கைது
ADDED : ஜூன் 25, 2024 11:50 PM
பெண்ணாடம் : வீட்டில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பதாக வந்த தகவலை தொடர்ந்து கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அதில், க.தொழூர் கிராமத்தில் ஆறுமுகம் மகன் வசந்தராஜ், 29, என்பவர் வீட்டில் சாக்கு மூட்டைகளில் ஹான்ஸ் உட்பட போதை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
வசந்தராஜை பிடித்து விசாரித்ததில், பெண்ணா டம் மோகன், 43, என்பவரிடம் 107 கிலோ ஹான்ஸ், 6 கிலோ விமல் பாக்குகளை ரூ.53 ஆயிரத்து 160 க்கு வாங்கியதை ஒப்புக் கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து வசந்தராஜை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய
பெண்ணாடம் மோகன், ஏற்கனவே ஹான்ஸ் விற்ற வழக்கில் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.