/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அலுவலருக்கு திடீர் நெஞ்சு வலி ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு அலுவலருக்கு திடீர் நெஞ்சு வலி ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு
அலுவலருக்கு திடீர் நெஞ்சு வலி ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு
அலுவலருக்கு திடீர் நெஞ்சு வலி ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு
அலுவலருக்கு திடீர் நெஞ்சு வலி ஓட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு
ADDED : ஜூன் 04, 2024 11:58 PM
கடலுார்: விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருப்பவர் விஜயக்குமார், 51; இவர், கடலுார் அரசு கல்லுாரியில் நடந்த லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் மையத்தில், விருத்தாசலம் தொகுதி அறையில் பணியில் இருந்தார்.
மதியம் 12:30 மணிக்கு மதியம் சாப்பிட்டு ஓட்டு எண்ணும் பணியை தொடர்ந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு நாற்காலியில் சாய்ந்தார். உடன் அங்கிருந்த மருத்துவக் குழு சோதனை செய்து மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரை செய்தனர்.
உடன் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலுார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஓட்டு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.