/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதல்வர் படம் அகற்றம் அதிகாரிகள் கலக்கம் முதல்வர் படம் அகற்றம் அதிகாரிகள் கலக்கம்
முதல்வர் படம் அகற்றம் அதிகாரிகள் கலக்கம்
முதல்வர் படம் அகற்றம் அதிகாரிகள் கலக்கம்
முதல்வர் படம் அகற்றம் அதிகாரிகள் கலக்கம்
ADDED : ஜூலை 03, 2024 02:59 AM
கடலுார் கலெக்டர் அலுவலக குறைதீர்வு மன்ற கூடத்தில், மத்திய அரசின் ஹட்கோ மற்றும் அலிம்கோ நிறுவனங்கள் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சி மேடையில் நிறுவனம் பேனர் கட்டப்பட்டதால், சுவரில் மாட்டியிருந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி படங்கள் மறைக்கப்பட்டன.
அங்கிருந்த மாநில அரசு அதிகாரிகள், முதல்வர் படங்களை மறைக்க வேண்டாம் என அறிவுறுத்தினார். அப்போது, அங்கிருந்த பா.ஜ.,வினர், மத்திய அரசு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி படத்தை ஏன் வைக்கவில்லை என, அதிகாரிகளிடம் கேட்டனர்.
பின்னர், மோடி படம் இல்லாததால், முதல்வர்கள் படமும் இருக்க கூடாது என கூறி, ஸ்டாலின், கருணாநிதி பங்களை கழற்றினர். அவர்களிடம் கேள்வி கேட்க முடியாத அதிகாரிகள், கலக்கமடைந்தனர்.
இந்நிலையில், நிகழ்ச்சிக்கு வந்த கலெக்டர் அருண்தம்புராஜ் காதுக்கு இப்பிரச்னை தெரியவர, ஒன்றும் சொல்ல முடியாமல், நிகழ்ச்சியில் பெயருக்கு அட்டனன்ஸ் போட்டுவிட்டு, வந்த வேகத்தில் வேறு வேலை இருப்பதாக கூறி 'ஜூட்' விட்டார். விழாவில் முதல்வர் படம் அகற்றப்பட்டது அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.