ADDED : ஜூலை 02, 2024 05:45 AM

நெல்லிக்குப்பம்: வெள்ளப்பாக்கம் பூரணி, புஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளப்பாக்கத்தில் பூரணி, புஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதை முன்னிட்டு, கடந்த 25ம் தேதி பூஜைகள் துவங்கியது. நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
கும்பாபிேஷக தினமான நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், ஐயனாரப்பனுக்கு ரக் ஷா பந்தனம், பூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டினர் செய்திருந்தனர்.