/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விதை உற்பத்தி குறித்து தொழில்நுட்ப பயிற்சி விதை உற்பத்தி குறித்து தொழில்நுட்ப பயிற்சி
விதை உற்பத்தி குறித்து தொழில்நுட்ப பயிற்சி
விதை உற்பத்தி குறித்து தொழில்நுட்ப பயிற்சி
விதை உற்பத்தி குறித்து தொழில்நுட்ப பயிற்சி
ADDED : ஜூலை 12, 2024 06:08 AM

விருத்தாசலம்: வேப்பூர் அடுத்த திருமலை அகரம் கிராமத்தில், நெல்லில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி, தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், வேளாண் அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள், அதிக மகசூல் தரும் உயர்தர ரகங்கள், விதை உற்பத்தி செய்யும் முறை குறித்து பேசினார்.
முனைவர் ஜெயகுமார் நெல்லில் காணப்படும் பூச்சி நோய் தாக்குதல், அதன் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.
ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை., இணையதள செயலிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும்,மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது.
பயிர் காப்பீட்டு திட்டம் குறித்த விளக்கங்களை வங்கி கள பணியாளர்கள் எடுத்துரைத்தனர்.