/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 'ஆசிரியர்கள் கைது வேதனை அளிக்கிறது': அரசு ஊழியர் சங்கம் கண்டனம் 'ஆசிரியர்கள் கைது வேதனை அளிக்கிறது': அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
'ஆசிரியர்கள் கைது வேதனை அளிக்கிறது': அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
'ஆசிரியர்கள் கைது வேதனை அளிக்கிறது': அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
'ஆசிரியர்கள் கைது வேதனை அளிக்கிறது': அரசு ஊழியர் சங்கம் கண்டனம்
ADDED : ஜூலை 30, 2024 11:29 PM

கடலுார் : ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றாமல் கைது செய்திருப்பது கண்டனத்திற்குறியது என, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'டிட்டோ ஜாக்' அமைப்பினர், கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனை, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் அமைப்பினர் கண்டித்து வருகின்றன.
அரசு ஊழியர் சங்க கடலுார் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சென்னை டி.பி.ஐ., வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர்.
நியாயமான முறையில் போராட்டத்தில் பங்கேற்க சென்ற ஆசிரியர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்வது கண்டனத்திற்குறியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அரசு ஊழியர் சங்கத்தின் கடலுார் மாவட்ட மையம் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.