/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ டாரஸ் லாரி திடீர் பழுது கடலுாரில் 'டிராபிக் ஜாம்' டாரஸ் லாரி திடீர் பழுது கடலுாரில் 'டிராபிக் ஜாம்'
டாரஸ் லாரி திடீர் பழுது கடலுாரில் 'டிராபிக் ஜாம்'
டாரஸ் லாரி திடீர் பழுது கடலுாரில் 'டிராபிக் ஜாம்'
டாரஸ் லாரி திடீர் பழுது கடலுாரில் 'டிராபிக் ஜாம்'
ADDED : ஜூலை 09, 2024 05:48 AM

கடலுார் : கடலுார் ஜவான்ஸ்பவன் சிக்னல் அருகில் செம்மண் கிராவல் ஏற்றி வந்த டாரஸ் லாரி திடீரென பழுதாகி நின்றதால் போக்குவரத்து பாதித்தது.
நடுவீரப்பட்டு போலீசார் கடந்த 30ம் தேதி, ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விலங்கல்பட்டு குழந்தைகுப்பத்தில் இருந்து 6 டாரஸ் லாரிகளில் அனுமதியின்றி ஏற்றி வந்த செம்மண் கிராவலை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்து, 6 டாரஸ் லாரி, 1 புல்டோசரை பறிமுதல் செய்தனர். செம்மணல் கிராவலுடன் டாரஸ் லாரிகள் கடலுார் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்க நேற்று கொண்டு வரப்பட்டது.
இதில், ஒரு டாரஸ் லாரி அண்ணா பாலம் சிக்னல் அருகில் ஜவான்ஸ்பவனையொட்டி மாலை 4:30 மணிக்கு வந்த போது, திடீரென பழுதாகி நின்றது. போக்குவரத்து போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர். அதனைத் தொடர்ந்து, ஜே.சி.பி., இயந்திரம் மூலமாக டாரஸ் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 5:15 மணி வரை 45 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.