
பரங்கிப்பேட்டை, ஜூலை 11-
பரங் கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், புதிய பி.டி.ஓ., வாக ரேவதி பொறுப்பேற்றுள்ளார்.
பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., வாக இருந்த ராஜசேகர், கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில், அங்கு பணிபுரிந்த ரேவதி, பரங்கிப்பேட்டை பி.டி.ஓ., வாக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.