/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஐம்பது சதவீத மானிய விலையில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கல் ஐம்பது சதவீத மானிய விலையில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கல்
ஐம்பது சதவீத மானிய விலையில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கல்
ஐம்பது சதவீத மானிய விலையில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கல்
ஐம்பது சதவீத மானிய விலையில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கல்
ADDED : ஜூலை 08, 2024 04:43 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு துணை வேளாண் விரிவாக்க மையத்தில் தமிழக முதல்வரின் மண்ணுயிர்காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் வழங்கினர்.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு வேளாண்துணை விரிவாக்க மையம், புவனகிரி வட்டார வேளாண் விரிவாக்க மையம் ஆகிய இடங்களில் தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர்காப்போம் திட்டத்தில் மானிய விலையில் பசுந்தாள் உர விதைகள் விநியோக நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை பங்கேற்று விவசாயிகளுக்கு பசுந்தாள் தக்கப்பூண்டு உர விதைகளை 50 சதவீத மானிய விலையில் வழங்கினார்.
வட்டார வேளாண் உதவி இயக்குனர் முகமதுநிஜாம், வேளாண் அலுவலர் ஜெயந்தி, உதவி வேளாண் அலுவலர் சிங்காரமூர்த்தி, வரதராஜன், ரமேஷ், நாகரத்தினம், செந்தில், சந்திரசேகர் மற்றும் விவசாயகள் பலர் கலந்துகொண்டு பசுந்தாள் உர விதைகளை வாங்கி சென்றனர்.