/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கரும்பு வயல்கள் தீப்பிடித்ததால் பரபரப்பு கரும்பு வயல்கள் தீப்பிடித்ததால் பரபரப்பு
கரும்பு வயல்கள் தீப்பிடித்ததால் பரபரப்பு
கரும்பு வயல்கள் தீப்பிடித்ததால் பரபரப்பு
கரும்பு வயல்கள் தீப்பிடித்ததால் பரபரப்பு
ADDED : ஜூலை 28, 2024 07:11 AM
குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த சமட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் பிரபாகரன். 4 ஏக்கர் கரும்பு பயிரிட்டுள்ளார். நேற்று பகல் 12:00 மணிக்கு இவரத கரும்பு வயல் திடீரென தீப்பிடித்தது. தகவலறிந்த குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர், நிலைய அலுவலர் உத்திராபதி தலைமையில் சென்று போராடி தீயை அணைத்தனர்.
அதேபோன்று, தையல்குணாம்பட்டினம் பகுதியில் பாஷியம் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டத்திலும் நேற்று காலை, திடீரென தீப்பிடித்தது. குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இரண்டு சம்பவங்களிலும் மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.