ADDED : ஜூலை 23, 2024 12:03 AM
புவனகிரி : புவனகிரி அருகே அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சிதம்பரத்தில் இருந்து கத்தாழை கிராமத்திற்கு, புவனகிரி வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று காலை 9:00 மணிக்கு, அந்த டவுன் பஸ், புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தம் வழியாக சென்றபோது, மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர்.
இதனால், பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது.
இது குறித்து டிரைவர் கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, பஸ் மீது கல்வீசிய நபர்களை தேடி வருகின்றனர்