Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை

ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை

ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை

ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை

ADDED : ஜூலை 29, 2024 05:22 AM


Google News
மந்தாரக்குப்பம் : கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வடக்குவெள்ளுர். கீழ்பாதி, மேல்பாதி, பெரியாக்குறிச்சி, சேப்ளாநத்தம், உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினசரி 300 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் இரவு நேரத்தில் குழந்தைகள் உடல் நலன் பாதிப்பு, விபத்து, மாரடைப்பு, உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு அருகில் உள்ள விருத்தாசலம், கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி இங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு பொதுநல அமைப்பினர் மற்றும் நுகர்வோர் அமைப்பினர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி கெங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us