/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாநில கைப்பந்து போட்டி; கலெக்டர் துவக்கி வைப்பு மாநில கைப்பந்து போட்டி; கலெக்டர் துவக்கி வைப்பு
மாநில கைப்பந்து போட்டி; கலெக்டர் துவக்கி வைப்பு
மாநில கைப்பந்து போட்டி; கலெக்டர் துவக்கி வைப்பு
மாநில கைப்பந்து போட்டி; கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 29, 2024 05:52 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் பெரியார் நகர் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் சேலஞ்சர்ஸ் கைப்பந்து கழகம் சார்பில், அழகப்பா நினைவு சுழற் கோப்பை கைப்பந்து போட்டி நேற்று 28ம் தேதி முதல் நாளை 30ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
போட்டியில் ஆண்கள் பிரிவில், சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை., அணி, சென்னை வருமானவரித்துறை அணி ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றுள்ளன.
பெண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை., அணி, சென்னை எஸ்.டி.ஏ.டி., அணி, சென்னை ஐ.சி.எப்., அணி, சென்னை ஜே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.
போட்டி துவக்க விழாவிற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் தலைமை தாங்கினார். என்.எல்.சி., கைப்பந்து வீரர் ராஜன்பாபு வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர், கலெக்டர் அருண் தம்புராஜ் பஸ் நிலையத்தில் இருந்து வீரர்கள் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போட்டியை, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், தாசில்தார் உதயகுமார், இன்ஸ்பெக்டர் முருகேசன், சேலஞ்சர்ஸ் கைப்பந்து கழக தலைவர் சலீம், செயலாளர் மோகன், பொருளாளர் அருண் மற்றும் சோழன் சம்சுதீன், மேனக் ஷா பங்கேற்றனர்.