/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாரத ஸ்டேட் பாங்க் பயிர்க்கடன் முகாம் பாரத ஸ்டேட் பாங்க் பயிர்க்கடன் முகாம்
பாரத ஸ்டேட் பாங்க் பயிர்க்கடன் முகாம்
பாரத ஸ்டேட் பாங்க் பயிர்க்கடன் முகாம்
பாரத ஸ்டேட் பாங்க் பயிர்க்கடன் முகாம்
ADDED : ஜூன் 26, 2024 11:22 PM

கடலுார்: பாரத ஸ்டேட் பாங்க் முதுநகர் கிளை சார்பில் கிழக்கு ராமாபுரத்தில் பயிர்க்கடன் புதுப்பித்தல் மற்றும் புதிய கடன் வழங்கும் முகாம் நடந்தது.
முதன்மை மேலாளர் பிரபாகரன், துணை கிளை மேலாளர் ராஜேஸ்வரி, உதவி மேலாளர் விஜயதாசன் ஆகியோர் பங்கேற்று, விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்குவது, கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள், பயிற்கடன் புதுப்பித்தல், விவசாயிகளுக்கென வட்டி விகிதம், வாராக்கடன்கள், கடனை முறையாக செலுத்தினால் வங்கிகள் மூலம் கிடைக்கும் நன்மைகள் ஆகியவை குறித்து வங்கி அதிகாரிகள் விரிவாக எடுத்துக் கூறினர்.
பின்னர் விவசாயிகள் ஏராளமானோர் பயிர்க்கடன்களை புதுப்பித்துக்கொண்டனர்.