ADDED : ஜூலை 16, 2024 11:12 PM

நெய்வேலி : வடக்குத்து ஊராட்சி, கீழ் வடக்குத்து கிராமத்தில் உள்ள அரசு உதவிபெறும் அருள் ஜோதி நடுநிலைப் பள்ளியில் விரிவுபடுத்தபட்ட காலை உணவு திட்டத்தை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பள்ளி மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட எம்.எல்.ஏ., மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஏ.பி.ஓ., கேசவலு, பள்ளி தாளாளர் நவீன்குமார், தலைமை ஆசிரியர் சரவணன், வடக்குத்து ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர் சடையப்பன், தி.மு.க., நிர்வாகிகள் குணசேகரன், ராமச்சந்திரன், ஆனந்த ஜோதி, ஏழுமலை, சிவந்தான் செட்டி, வெங்கடேசன், சுரேஷ், ராஜேஷ், வடக்கு மேலுார் ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி, ராஜபூபதி, இளைஞரணி கோபு, தகவல் தொழில்நுட்ப அணி தர்மலிங்கம் கலந்து கொண்டனர்.