மகளிர் கல்லுாரியில் விளையாட்டு விழா
மகளிர் கல்லுாரியில் விளையாட்டு விழா
மகளிர் கல்லுாரியில் விளையாட்டு விழா
ADDED : மார் 12, 2025 11:36 PM

கடலுார்: கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில் நடந்த விளையாட்டு விழாவில், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி.,ஜெயக்குமார் பரிசு வழங்கினார்.
கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சபீனா பானு தலைமை தாங்கினார். கடலுார் எஸ்.பி.,ஜெயக்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கபடி, கோ கோ, பூ பந்து, வாலிபால், தடகளப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். போட்டிகளை கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் உமா, ஒருங்கிணைத்தார்.


