/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் கடலுார் நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
கடலுார் நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
கடலுார் நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
கடலுார் நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஜூன் 23, 2024 05:33 AM

கடலுார்: கடலுார் நீதிமன்றத்தில், இரண்டு நாட்கள் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று துவங்கியது.
கடலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, பார் அசோசி யேஷன், வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி இணைந்து, கடலுாரில் நீதிமன்ற பணியாளர்கள், அவரது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாமை நேற்று (22ம் தேதி) மற்றும் நாளை (23ம் தேதி) இரு நாட்கள் ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, கடலுார் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று மருத்துவ முகாம் துவங்கியது. கடலுார் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் அன்வர் சதாத் வரவேற்றார்.
மோட்டார் வாகன விபத்து வழக்கு இரண்டாவது மாவட்ட நீதிபதி பிரகாஷ், போக்சோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி லட்சுமிரமேஷ், மாஜிஸ்திரேட் வனஜா, பார் அசோசியேஷன் தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் சுரேஷ்குமார், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் அமுதவல்லி, செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஹிரியன் ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் அசோக்பாஸ்கர், டாக்டர் பரிமேலழகன் மற்றும் நீதிபதிகள், பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி இயக்குனர் ஜெயசிங் தலைமையில் டாக்டர்கள் குழு பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
மாவட்ட அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள், குமாஸ்தாக்கள், நீதிமன்ற பணியாளர்கள், நீதிமன்ற காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு மருத்துவ முகாமில் பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
மருத்துவ முகாம் இன்றும் நடக்கிறது.