/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எஸ்.பி., அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு எஸ்.பி., அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு
எஸ்.பி., அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு
எஸ்.பி., அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு
எஸ்.பி., அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஜூன் 13, 2024 05:55 AM

கடலுார் : கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி போலீஸ் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி., ராஜாராம் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. காவல் துறை அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், போலீசார் குழந்தை தொழிலாளர் எதிரான வாசகத்தை கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன், டி.எஸ்.பி., சண்முகவேலன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், எஸ்.ஐ., முகமது நிசார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், அமைச்சு பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.