ADDED : ஜூலை 30, 2024 05:24 AM
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் பழனி.
இவரது மகன் முருகன், 24; இவர் மனநலம் பாதித்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 26ம் தேதி மாலை 3:00 மணிக்கு, வெளியே சென்ற முருகனை காணவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை பழனி கொடுத்த புகாரில், பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.