/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உடல் ஆரோக்கித்திற்கு ஸ்கிப்பிங் செய்யலாம் வாங்க... உடல் ஆரோக்கித்திற்கு ஸ்கிப்பிங் செய்யலாம் வாங்க...
உடல் ஆரோக்கித்திற்கு ஸ்கிப்பிங் செய்யலாம் வாங்க...
உடல் ஆரோக்கித்திற்கு ஸ்கிப்பிங் செய்யலாம் வாங்க...
உடல் ஆரோக்கித்திற்கு ஸ்கிப்பிங் செய்யலாம் வாங்க...
ADDED : ஜூலை 25, 2024 05:54 AM

விருத்தாசலம்: 'அனைத்து விளையாட்டுகளுக்கும் உடல்திறனை மேம்படுத்த அடிப்படை பயிற்சிகளில் ஒன்று ஸ்கிப்பிங் விளையாட்டு' என ரோப் ஸ்கிப்பிங் பயிற்சியாளர் தெரிவித்தார்.
தமிழ்நாடு ரோப் ஸ்கிப்பிங் விளையாட்டு சங்கம் பார் பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் மாநில பொதுச் செயலாளரும், பயிற்சியாளருமான கமலேஸ்வரன் கூறியதாவது:
நமது பாரம்பரிய விளையாட்டுகளில் ஸ்கிப்பிங் ஒன்று. பெண் குழந்தைகள் மிகவும் ஆர்வமாக விளையாடும் விளையாட்டு. அனைவரும் ஒருமுறையாவது ஸ்கிப்பிங் விளையாடியிருப்போம்; பார்த்திருப்போம்.
பொதுவாக அனைத்து விளையாட்டுகளுக்கும் உடல்திறனை மேம்படுத்த அடிப்படை பயிற்சிகளில் ஒன்று ஸ்கிப்பிங் விளையாட்டு.
தற்போது, ஸ்கிப்பிங் விளையாட்டு, உலகம் முழுவதும் விளையாடும் வகையில் பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்காக சங்கங்கள் உருவாக்கி, தமிழ்நாடு ரோப் ஸ்கிப்பிங் சங்கம் ஃபார் பாய்ஸ் அன்ட் கேர்ள்ஸ் என்ற சங்கம் மூலம் ரோப் ஸ்கிப்பிங் கூட்டமைப்பு இந்தியா, உலக ரோப் ஸ்கிப்பிங் கூட்டமைப்பு ஆகிய சங்கங்களுடன் ஒன்றிணைந்து, மாநில மற்றும் தேசிய அளவில் பல வீரர், வீராங்கனைகளை உருவாக்கி வருகிறோம்.
இந்த பயிற்சிக்கு பெரிய பொருட்செலவு, பெரிய இடவசதி தேவையில்லை. அவரவர் உயரத்திற்கு தகுந்தாற்போல ஒரு கயிறு மற்றும் 2 சதுர மீட்டர் இடம் மட்டும் இருந்தால் போதும்.
உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ ஸ்கிப்பிங் உதவும். ஸ்கிப்பிங் விளையாடுவோர் ஜிம்முக்கு போக வேண்டாம். நெடுந்துாரம் நடக்கவோ, ஓடவோ வேண்டாம்.
6 நிமிடத்தில் 3 கி.மீ., சைக்கிள் மிதிப்பதற்கும், ஒன்னரை கி.மீ., 12 நிமிடத்தில் ஓடுவதற்கும், 30 நிமிடங்கள் மிதமாக ஓடுவதற்கும், 650 மீட்டருக்கு 12 நிமிடங்களில் நீந்துவதற்கும், 2 செட் டென்னிஸ் விளையாடுவதற்கும் சமமாக, இந்த ஸ்கிப்பிங்கை 10 நிமிடம் 120 ஆர்.பி.எம்., வேகத்தில் கயிறை சுழற்றி விளையாடினால் போதும்.
எனவே, அனைவரும் ஸ்கிப்பிங் விளையாட்டில் கவனம் செலுத்தி, உடல்நலத்துடன் வாழ வேண்டும். என, தெரிவித்தார்.