/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எல்.சி., புதிய டி.ஐ.ஜி.,யாக சிவக்குமார் பொறுப்பேற்பு என்.எல்.சி., புதிய டி.ஐ.ஜி.,யாக சிவக்குமார் பொறுப்பேற்பு
என்.எல்.சி., புதிய டி.ஐ.ஜி.,யாக சிவக்குமார் பொறுப்பேற்பு
என்.எல்.சி., புதிய டி.ஐ.ஜி.,யாக சிவக்குமார் பொறுப்பேற்பு
என்.எல்.சி., புதிய டி.ஐ.ஜி.,யாக சிவக்குமார் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 12, 2024 05:19 AM

நெய்வேலி: என்.எல்.சி., மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் புதிய டி.ஐ.ஜி., யாக சிவக்குமார் பொறுப்பேற்றார்.
கடலுார் மாவட்டம் என்.எல்.சி., நிறுவனத்தில் 4 அனல்மின் நிலையங்கள் மற்றும் 3 பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகிறது. தொழிலக பகுதிகள் மட்டுமின்றி என்.எல்.சி., தலைமை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களின் பாதுகாப்பு பணிகளில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படையின் புதிய டி.ஐ.ஜி., யாக சிவக்குமார் நேற்று பொறுப்பேற்றார். இமாச்சல பிரதேச கேடரின் 2008 பேட்ச் ஐ.பி.எஸ்.,அதிகாரியான இவர், கோவையை சேர்ந்தவர்.
மத்திய தொழிலக பாதுகாப்பு படை பிரிவில் சேர்வதற்கு முன்பாக இமாசல பிரதேசத்தின் மண்டி சரக டி.ஐ.ஜி.,யாக பணியாற்றினார். இமாச்சல போலீஸ் துறையில் சிறப்பு கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையில் சிறப்பான பணிக்கான பல விருதுகளை பெற்றுள்ளார்.
இவர், என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளியை சந்தித்து, என்.எல்.சி.,யின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். என்.எல்.சி., நிறுவனத்தின் இணையதள முடக்கம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் நிலவும் குறைபாடுகள் அதிகரித்து வரும் சூழலில் தமிழகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்., அதிகாரி சிவக்குமாரை மத்திய அரசு டி.ஐ.ஜி.,யாக நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அவருக்கு சீனியர் கமாண்டர் ஸ்ரீ நவ்தீப் சிங் ஹீரா தலைமையிலான பாதுகாப்பு படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.