/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓட்டு எண்ணும் பணியால் சில்வர் பீச்சில் 'தடை' ஓட்டு எண்ணும் பணியால் சில்வர் பீச்சில் 'தடை'
ஓட்டு எண்ணும் பணியால் சில்வர் பீச்சில் 'தடை'
ஓட்டு எண்ணும் பணியால் சில்வர் பீச்சில் 'தடை'
ஓட்டு எண்ணும் பணியால் சில்வர் பீச்சில் 'தடை'
ADDED : ஜூன் 05, 2024 12:00 AM
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் பணியால், சில்வர் பீச்சில் பொதுமக்களுக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டது.
கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில், கடலுார் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. ஓட்டு எண்ணும் மையத்திற்கு சென்ற அரசு அதிகாரிகள், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளரின் முகவர்கள் தேவனாம்பட்டினம் உப்பனாறு பாலம் அருகிலேயே நிறுத்தப்பட்டு, உரிய ஆவணங்கள் இருந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேவனாம்பட்டினத்தில் நேற்று போலீசார் சாலையின் குறுக்கே பேரிகார்டுகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சில்வர் பீச்சிற்கு செல்ல முயன்றவர்களை உப்பனாறு பாலம் அருகே, போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.
யாரையும் சில்வர் பீச்சிற்கு செல்ல அனுமதிக்கவில்லை.