/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விருத்தாசலம் பாலக்கரையில் சிக்னல் அமைப்பு விருத்தாசலம் பாலக்கரையில் சிக்னல் அமைப்பு
விருத்தாசலம் பாலக்கரையில் சிக்னல் அமைப்பு
விருத்தாசலம் பாலக்கரையில் சிக்னல் அமைப்பு
விருத்தாசலம் பாலக்கரையில் சிக்னல் அமைப்பு
ADDED : ஜூலை 22, 2024 01:17 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் பாலக்கரையில், போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஒருலட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
இங்கு, அரசு பள்ளி, கல்லுாரி, பீங்கான் தொழிற்சாலை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பல்லாயிர கணக்கான மக்கள் தினசரி கிராம பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடைவீதி, பாலக்கரை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இந்நிலையில், வாகன ஓட்டிகள் நலன் கருதி, போக்குவரத்து நெரிசலை குறைக்க, விருத்தாசலம் போலீசார் பாலக்கரை பகுதியில் சிக்னல் அமைத்துள்ளனர்.
இதனால், வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.