நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அரசு மேல் நிலைப் பள்ளியில் உயர் கல்விக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பொறியியல் பிரிவு முன்னாள் மாணவரும் கல்வி விழிப்புணர்வு மைய நிர்வாகியுமான இளவரசன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்து சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசினார்.
மேலும், உயர்கல்வியால் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் கருத்தரங்கில் விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு கணித திறன் மேம்படுத்துதல் குறித்து சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.