/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திட்டக்குடியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் திட்டக்குடியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
திட்டக்குடியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
திட்டக்குடியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
திட்டக்குடியில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
ADDED : ஜூன் 14, 2024 06:46 AM

திட்டக்குடி: திட்டக்குடி நகராட்சி பகுதியிலுள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், 46கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திட்டக்குடி நகராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டைக் கண்டறியும் பொருட்டு, நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் தலைமையில் மேற்பார்வையாளர்கள் ரஜினி, கலைவாணன், கோபிநாத் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு பரப்புரையாளர்கள் கலாவதி, சிவநந்தினி, பெண்ணரசி, பரமேஸ்வரி, அருள்ஜோதி ஆகியோர் நகராட்சி பகுதியிலுள்ள 60க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 46 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பிளாஸ்டிக் பை விற்பனையில் ஈடுபட்ட கடையின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.3ஆயிரத்து 200, அபராதமாக வசூலிக்கப்பட்டது. சுகாதாரத்துறையினரின் அதிரடி சோதனையால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.