/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ADDED : ஜூலை 23, 2024 12:06 AM
கடலுார் : கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கடலுார், முதுநகரில் பிரசித்திப் பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தை முன்னிட்டு நாளை 24ம் தேதி மாலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜை, 25ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் இரவு வீதியுலா நடக்கிறது. 9ம் நாள் உற்சவமான வரும் 2ம் தேதி காலை செடல் உற்சவம், இரவு ரத உற்சவம் நடக்கிறது. 4ம் தேதி காலை 7:00 மணிக்கு திருத்தேர் உற்சவம், இரவு 7:00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடக்கிறது. 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், 6ம் தேதி இரவு 7:00 மணிக்கு விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.