ADDED : ஜூலை 22, 2024 01:25 AM

விருத்தாசலம் : கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் உள்ள விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில், விருத்தாசலம் மிதிவண்டி குழுவினர் சார்பில்,மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், மருத்துவர் விஜய், சித்த மருத்துவர் பார்த்திபன், ஒருங்கிணைப்பாளர் ஹசன், ஆசிரியர்கள் ரத்தின புகழேந்திமற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.பொறியாளர் சங்கர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்கள் தன்வந்த் விஜய், ரக்சனா ஆனந்த், சோகா ஹசன் ஆகியோருக்கு,ஆசிரியர் ரத்தின புகழேந்தி எழுதிய செல்பி பாரதி படக்கதை நுால் வழங்கப்பட்டது.