Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மணல் குவாரி கலவர வழக்கு கடலுார் கோர்ட்டில் அமைச்சர் ஆஜர்

மணல் குவாரி கலவர வழக்கு கடலுார் கோர்ட்டில் அமைச்சர் ஆஜர்

மணல் குவாரி கலவர வழக்கு கடலுார் கோர்ட்டில் அமைச்சர் ஆஜர்

மணல் குவாரி கலவர வழக்கு கடலுார் கோர்ட்டில் அமைச்சர் ஆஜர்

ADDED : ஜூன் 15, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
கடலுார்: மணல் குவாரி கலவர வழக்கு விசாரணைக்காக அமைச்சர் சிவசங்கர் நேற்று கடலுார் கோர்ட்டில் ஆஜரானார்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த நெய்வாசல் வெள்ளாற்றில், 2015ம் ஆண்டு அரசு மணல் குவாரி இயங்கியது.

இதற்கு அரியலுார் மாவட்டம் சன்னாசிநல்லுார் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4.2.2015 அன்று தற்போதைய போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தலைமையில் 400க்கும் மேற்பட்டோர் குவாரியை முற்றுகையிட்டனர்.

போலீசார் தடுக்க முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமாக மாறியது. அதில் இரு பொக்லைன் இயந்திரங்கள் சூறையாடப்பட்டு, 7 போலீசார் காயமடைந்தனர். போலீசார் தடியடியடியில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக ஆவினங்குடி போலீசார் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட 37 பேர் மீது கடலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் சிவசங்கர் ஆஜரானார்.

நீதிபதி ஜவகர், வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us