/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாகன தணிக்கையில் ரூ.7 லட்சம் பறிமுதல் வாகன தணிக்கையில் ரூ.7 லட்சம் பறிமுதல்
வாகன தணிக்கையில் ரூ.7 லட்சம் பறிமுதல்
வாகன தணிக்கையில் ரூ.7 லட்சம் பறிமுதல்
வாகன தணிக்கையில் ரூ.7 லட்சம் பறிமுதல்
ADDED : ஜூன் 29, 2024 06:09 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.7 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெரிய தச்சூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் நேற்று மாலை செஞ்சி சாலை கோழிப்பண்ணை அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, விழுப்புரம் நோக்கி சென்ற இன்னோவா காரை நிறுத்தி சோதனை செய்ததில் ரூ.7 லட்சம் பணம் இருந்தது.
காரில் இருந்த இருவரை விசாரணை செய்ததில், அவர்கள் ்கள் கும்பகோணத்தை சேர்ந்த பிரசாத்,35: சம்பத்,49; என்பதும், இவர் அவர்களது முதலாளி பூபதி கொடுத்து அனுப்பிய சுவாமி சிலையை விற்பனை செய்து பணத்தை எடுத்து செல்வதாக கூறினர். அதற்கான ஆவணம் இல்லை.
அதனையொட்டி, பணத்தை பறிமுதல் செய்த போலீசார், அதனை தேர்தல் பறக்கும் படை அலுவலர் அசோக்குமாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் விழுப்புரம் துணை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.