/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ. 2.25 லட்சம் குட்கா பறிமுதல் ராமநத்தத்தில் போலீஸ் அதிரடி ரூ. 2.25 லட்சம் குட்கா பறிமுதல் ராமநத்தத்தில் போலீஸ் அதிரடி
ரூ. 2.25 லட்சம் குட்கா பறிமுதல் ராமநத்தத்தில் போலீஸ் அதிரடி
ரூ. 2.25 லட்சம் குட்கா பறிமுதல் ராமநத்தத்தில் போலீஸ் அதிரடி
ரூ. 2.25 லட்சம் குட்கா பறிமுதல் ராமநத்தத்தில் போலீஸ் அதிரடி
ADDED : ஜூலை 19, 2024 04:57 AM

திட்டக்குடி: ராமநத்தம் அருகே ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
ராமநத்தம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார், நேற்று மதியம் 2:00 மணிக்கு, கீழ்ஆதனுார் கிராமத்திற்கு ரோந்து சென்றனர். அங்கு பஸ் நிறுத்தம் அருகே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.
விசாரணையில், டிரைவர் ஆவட்டிகுடிகாட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக்,26, என்பதும், மேல்ஆதனுார் கிராமத்தை சேர்ந்த பாலாஜி, 60, என்பவரின் கடைக்கு புகையிலை பொருட்கள் எடுத்து செல்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து பாலாஜி, கார்த்திக் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள 15மூட்டை ஹான்ஸ் பாக்கெட்டுகள், கூல் லிப், விமல்பாக்கு தலா 4மூட்டைகள் மற்றும் ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.