/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெல்லிக்குப்பத்தில் சாலை பணி துவங்கியது நெல்லிக்குப்பத்தில் சாலை பணி துவங்கியது
நெல்லிக்குப்பத்தில் சாலை பணி துவங்கியது
நெல்லிக்குப்பத்தில் சாலை பணி துவங்கியது
நெல்லிக்குப்பத்தில் சாலை பணி துவங்கியது
ADDED : ஜூன் 29, 2024 05:51 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில், 'தினமலர்' செய்தி எதிரொலியால் சாலை பணி துவங்கியது.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் திருக்குளம் பகுதியில் சாலை அமைக்க 6 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்ததாரர் வீரமோகன் டெண்டர் எடுத்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு 3 மாதங்களுக்கு முன் சாலை அமைக்க ஜல்லி மற்றும் எம் சாண்ட் ஆகியவற்றை சாலையின் நடுவே கொட்டப்பட்டது. ஆனால், பணி நடைபெறவில்லை. இதனால், அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பணிகள் துவங்காதது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, இதுவரை செய்த பணிகளுக்கு பணம் வழங்காததால் வேலை செய்ய முடியவில்லை என தெரிவித்தார். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நிர்வாகம், முடித்த பணிகளுக்கு பாதியளவு தொகையை வழங்கினர். ஆனால், தனக்கு சேர வேண்டிய மொத்த தொகையையும் கொடுத்தால் மட்டுமே திருக்குளத்தில் சாலை பணியை துவங்குவேன் என ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.
விரைவில் முடித்த பணிகளுக்கான தொகையை முழுதுமாக வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து நேற்று திருக்குளம் பகுதியில் சாலை போடும் பணி துவங்கப்பட்டது. 3 மாதம் பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.