ADDED : ஜூலை 30, 2024 05:31 AM
கடலுார்: கடலுார் போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் நடமாடும் வாகனம் மூலமாக சாலை போக்குவரத்து விழிப் புணர்வு வீடியோ வெளியீடு நிகழ்ச்சி நடந்தது.
இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வீடியோ வெளியிட்டு பேசுகையில், 'பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஆட்டோவில் அதிக மாணவர்களை ஏற்றக்கூடாது. இருசக்கர வாகனங்களில், இரண்டு பேருக்கு மேல் செல்லக்கூடாது.
பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய் வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்' என்றார்.