/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காணாமல்போன மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு காணாமல்போன மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு
காணாமல்போன மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு
காணாமல்போன மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு
காணாமல்போன மொபைல் உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : மார் 14, 2025 05:33 AM

காட்டுமன்னார்கோவில்: காணாமல்போன மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த எள்ளேரியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 60; இவரது மொபைல் போன், கடந்த டிச., மாதம் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்கியிருந்தபோது, திருடுபோனது.
காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து மொபைல் போனை தேடி வந்தனர். அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அந்த மொபைல் போனை பயன்படுத்தியது தெரிந்தது. இதையடுத்து, மொபைல் போனை, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் பறிமுதல் செய்து உரியவரிடம் ஒப்படைத்தார்.