/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இணைப்பு சாலை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை இணைப்பு சாலை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை
இணைப்பு சாலை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை
இணைப்பு சாலை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை
இணைப்பு சாலை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை
ADDED : ஜூன் 11, 2024 06:11 AM

கடலுார்: இணைப்பு சாலை அமைக்கக்கோரி, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கடலுார் அடுத்த மேல்அழிஞ்சிப்பட்டு கிராம மக்கள் கொடுத்துள்ள மனு;
எங்கள் கிராமத்தின் வழியாக விழுப்புரம்-நாகப்பட்டினம் புதிய தேசிய நெடுஞ்சாலை பணி நடந்து வருகிறது.
மேல்அழிஞ்சிபட்டில் இருந்து வெள்ளவாரி அணைக்கட்டு இடையே பாலம் அமைக்கப்படுகிறது.
அதனால் விளை நிலத்திற்கு செல்லும் விவசாயிகளின் நலனுக்காகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் பாலம் அருகில் இணைப்பு சாலை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.