/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில் நிலைய நடைமேடை பணி விரைந்து முடிக்க கோரிக்கை ரயில் நிலைய நடைமேடை பணி விரைந்து முடிக்க கோரிக்கை
ரயில் நிலைய நடைமேடை பணி விரைந்து முடிக்க கோரிக்கை
ரயில் நிலைய நடைமேடை பணி விரைந்து முடிக்க கோரிக்கை
ரயில் நிலைய நடைமேடை பணி விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 28, 2024 01:02 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ரயில் நிலைய நடைமேடை பணியை விரைந்து முடிக்க, வர்த்தக சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து, பரங்கிப்பேட்டை வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், திருச்சி கோட்ட பொருளாதார முதன்மை மேலாளர் ஜெயந்தியிடம் கொடுத்துள்ள மனு:
பரங்கிப்பேட்டை ரயில் நிலைய நடைமேடை உயர்த்தும் பணி நடந்து வருகிறது. தற்போது, ரயில் பயணிகள் ரயிலில் ஏறவும், இறங்கவும் மிகவும் சிரமப்படுவதால் இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், சேதமடைந்துள்ள ரயில் நிலைய கட்டடத்தில், சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதால் இடித்து அகற்ற வேண்டும். மேலும், ரயில் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.