/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நடுவீரப்பட்டு நரியன் ஓடையில் கருவேல மரங்களை அகற்றிட கோரிக்கை நடுவீரப்பட்டு நரியன் ஓடையில் கருவேல மரங்களை அகற்றிட கோரிக்கை
நடுவீரப்பட்டு நரியன் ஓடையில் கருவேல மரங்களை அகற்றிட கோரிக்கை
நடுவீரப்பட்டு நரியன் ஓடையில் கருவேல மரங்களை அகற்றிட கோரிக்கை
நடுவீரப்பட்டு நரியன் ஓடையில் கருவேல மரங்களை அகற்றிட கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2024 01:21 AM

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு நரியன் ஓடையில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடுவீரப்பட்டு-சி.என்.பாளையம் இடையில் நரியன்ஓடை உள்ளது. இந்த ஓடையில் சீமைகருவேல மரங்கள் வளர்ந்து மழைகாலத்தில் தண்ணீர் ஓடுவதை தடுத்து வருகிறது.
மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் கலெக்டர் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் மனு கொடுக்கப்பட்டது.
மனுவினை ஆய்வு செய்த விருத்தாசலம் வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அவர்கள் 3,000 மீட்டர் துாரத்திற்கு சீமைகருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.
இந்த மரங்களை பிப்ரவரி 2024ல் ஏலம் விடப்பட்டு சீமைகருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படும் என தெரிவித்தார்.
ஆனால் 6 மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மீண்டும் கடந்த சில தினங்களுக்கு முன் கலெக்டருக்கு மனு கொடுக்கப்பட்டது.உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளிடமிருந்து பதில் மட்டுமே வருகிறது.
ஆனால் செயல்பாட்டில் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அடுத்த மாதம் மழை காலங்கள் ஆரம்பிக்க உள்ளது. ஆகையால் புதியதாக பொறுப்பேற்றிருக்கும் கலெக்டர் நடுவீரப்பட்டு நரியன்ஓடையில் உள்ள சீமைகருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.