/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாலை விரிவாக்கம் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு சாலை விரிவாக்கம் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு
சாலை விரிவாக்கம் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு
சாலை விரிவாக்கம் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு
சாலை விரிவாக்கம் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்பு
ADDED : ஜூலை 14, 2024 11:22 PM
மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மீண்டும் கடைகள் ஆக்கிரமித்து வருவதால் அரசின் திட்டம் வீணாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு மந்தாரக்குப்பம் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருபுறமும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் வடிகால் வசதியுடன் நான்கு வழிச்சாலை அமைத்தனர்.
இதற்காக பலகோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மீண்டும் சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பணிகள் அனைத்தும் சில நாட்கள் மட்டுமே வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. அதன் பின்னர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் படிப்படியாக கடை ஆக்கிரமிப்புகள், தள்ளுவண்டி கடைகள் அமைத்தல் , கடை முன்பு மேற்கூரை அமைத்தல் உள்ளிட்டவைகளால் சாலைகளில் தற்போது இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மற்றும் வாகன நெரிசல் ஏற்பட்டு தினசரி வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. பலகோடி ரூபாயில் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட நான்குவழி தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளின் அலட்சியத்தால் மீண்டும் கடைகள் ஆக்கிரமிப்பால் தற்போது இருவழிச்சாலையாக மாறி வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமால் அலட்சியமாக உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.