ராஜகோபால சுவாமி பல்லக்கில் வீதியுலா
ராஜகோபால சுவாமி பல்லக்கில் வீதியுலா
ராஜகோபால சுவாமி பல்லக்கில் வீதியுலா
ADDED : ஜூன் 01, 2024 06:07 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் ராஜகோபால சுவாமி பல்லக்கில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பெருமாள், தாயார் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
முக்கிய நிகழ்வாக, பெருமாள், தாயாருக்கு திருக்கல்யாணம், தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. 10ம் நாள் உற்சவமாக பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.