ADDED : ஜூலை 14, 2024 11:24 PM
பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே மழைமானி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருவேப்பிலங்குறிச்சி வி.ஏ.ஓ., அலு வலகம் அருகே வருவாய்த்துறை சார்பில் தானியங்கி மழைமானி பொருத்தப்பட்டது. நேற்று காலை வி.ஏ.ஓ., ஆனந்தராஜ் அலுவலகம் வந்தபோது மழைமானியை காணவில்லை. தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை கொண்டு மர்மநபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.