/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புதர் மண்டிய விடுதி மாணவி்கள் அச்சம் புதர் மண்டிய விடுதி மாணவி்கள் அச்சம்
புதர் மண்டிய விடுதி மாணவி்கள் அச்சம்
புதர் மண்டிய விடுதி மாணவி்கள் அச்சம்
புதர் மண்டிய விடுதி மாணவி்கள் அச்சம்
ADDED : ஜூலை 18, 2024 08:37 AM

கடலுார், : கடலுார் செம்மண்டலத்தில் அரசு பெண்கள் ஐ.டி.ஐ., செயல்பட்டு வருகிறது. இங்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவியர் படிக்கின்றனர். இங்கு பயிலும் மாணவியர் தங்குவதற்காக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அரசு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் விடுதி கட்டப்பட்டது. கம்மியம்பேட்டை சாலையில் உள்ள இந்த விடுதியில் ஏராளமான மாணவியர் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதி வளாகம் பராமரிக்கப்டாமல் புதர்மண்டியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மாணவியர் கடும் அச்சமடைந்துள்ளனர். எனவே, விடுதி வளாகத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.