/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்பு
சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்பு
சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்பு
சார்பதிவாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைகழிப்பு
ADDED : ஜூலை 23, 2024 11:13 PM
பண்ருட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளர் பதவி, கடந்த 9 மாதமாக காலியாக உள்ளது. இங்கு, அடுத்து நிலையில் உதவியாளராக உள்ளவர் இப்பணியிடத்தை கூடுதலாக கவனித்து வருகிறார். இதனால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிகள் தொய்வாகவே நடக்கிறது. இங்கு, பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்கள் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு, புரோக்கர் வைத்ததுதான் சட்டமாக உள்ளது.
வில்லங்கம், பத்திர காப்பி மனு செய்வதர்களுக்கு 15 நாட்களுக்கு பிறகே வழங்கப்படுகிறது. ஆனால், புரோக்கர்கள் மூலம் அணுகினால் விரைவில் வில்லங்கம், பத்திரகாப்பி கிடைத்து விடுகிறது. மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என, பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் புலம்புகின்றனர்.