/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாலை பணி நிறுத்தியதை கண்டித்து மறியல் சாலை பணி நிறுத்தியதை கண்டித்து மறியல்
சாலை பணி நிறுத்தியதை கண்டித்து மறியல்
சாலை பணி நிறுத்தியதை கண்டித்து மறியல்
சாலை பணி நிறுத்தியதை கண்டித்து மறியல்
ADDED : ஜூன் 06, 2024 02:42 AM
சிதம்பரம்: சிதம்பரம் அருகே சாலை பணி நிறுத்தப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அடுத்த துணிசிரமேடு ஊராட்சி, கிழக்குத் தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். தற்போது ஊராட்சி சார்பில், அப்பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடந்தது. அந்த சாலையில் ஆக்கிரமிப்பு இருப்பதால் சாலை நேராக போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதுகுறித்து கிராம மக்கள் குமராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் அத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.