/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு
அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு
அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு
அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஜூன் 14, 2024 06:42 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பரிசு வழங்கும் நிழக்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர் பாலச்சந்தர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வினோத்குமார் வரவேற்றார். நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.
மாணவர் சங்க பொருளாளர் சீனிவாசன், துணை தலைவர்கள் ராஜசேகர், வழக்கறிஞர் விஜயகுமார், துணை செயலாளர்கள் சாமுவேல் கென்னடி, சபாநாதன், ஜெய்சங்கர், ரங்கராஜ், ரமேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயசுதா மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.