ADDED : ஜூன் 14, 2024 06:25 AM
விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் மகளை காணவில்லை என, போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.
உளுந்துார்பேட்டை அடுத்த செஞ்சிகுப்பம் பாலு மனைவி ராதா, 24. இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியது. குழந்தை இல்லை. இதனால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனமுடைந்த ராதா, மங்கலம்பேட்டை அடுத்த எம்.அகரம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த 5ம் தேதி கணவர் வீட்டிற்கு செல்வதாகக் கூறி சென்ற ராதா, அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் அமுதா கொடுத்த புகாரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.