குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி
ADDED : ஜூன் 15, 2024 05:59 AM

புவனகிரி: புவனகிரி அடுத்த வடதலைக்குளம் துவக்கப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
புவனகிரி ஒன்றியம், வடதலைக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி வாசிப்பு மற்றும் பள்ளியில் சேர்ந்த புதிய மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உதவி ஆசிரியை வசந்தா வரவேற்றார். தலைமை ஆசிரியர் துரைமணிராஜன் உறுதி மொழியை வாசித்தார். தொடர்ந்து குழந்தைகளை சிறுவயதில் கூலி வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என பெற்றோர்களிடத்தில் அறிவுறுத்தினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.