/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி முன்பு மறியல் சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி முன்பு மறியல்
சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி முன்பு மறியல்
சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி முன்பு மறியல்
சிதம்பரம் மருத்துவக்கல்லுாரி முன்பு மறியல்
ADDED : ஜூலை 16, 2024 11:35 PM

சிதம்பரம், : சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முன்பு நோயாளிகள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அருகே பழஞ்சநல்லூர் கிராமத்தில் திருமண வரவேற்பில், விருந்து சாப்பிட்ட 80 க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
அதில், 48 பேர் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அவர்களை, டிஸ்சார்ஜ் செய்வதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், தங்கள் உடல்நலம் முழுமையாக குணமாகவில்லை என, கூறி, மருத்துவக்கல்லுாரி முன்பு, மாலை 5:00 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சிதம்பரம் தாசில்தார் ஹேமா ஆனந்தி, ஏ.எஸ்.பி.,ரகுபதி, அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் கல்பனா, சப் இன்ஸ்பெக்டர் லெனின் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியதில், பாதிப்பு குறைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக கூறியுள்ளனர். அதையடுத்து, நோயாளிகளை போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து, 30 நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.