/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மருந்து உற்பத்தியாளர்கள் சங்க சிறப்பு கூட்டம் மருந்து உற்பத்தியாளர்கள் சங்க சிறப்பு கூட்டம்
மருந்து உற்பத்தியாளர்கள் சங்க சிறப்பு கூட்டம்
மருந்து உற்பத்தியாளர்கள் சங்க சிறப்பு கூட்டம்
மருந்து உற்பத்தியாளர்கள் சங்க சிறப்பு கூட்டம்
ADDED : ஜூலை 18, 2024 05:30 AM

கடலுார் : புதுச்சேரியில் சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்து உற்பத்தியாளர்கள் சங்க சிறப்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, சங்க தலைவர் சுசான்லி ரவி தலைமை தாங்கினார். ராம்ஜீ வரவேற்றார், சுப்புரத்தினம் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார். புதிய விதிமுறைகள், சட்டம் குறித்து ராஜேஷ்குமார், அலெக்சாண்டர் விளக்கவுரையாற்றினர். இதில் எ.யூ.எஸ்., அண்ட் எச் சம்மந்தமாக வந்துள்ள புதியவிதிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மருந்துகள் உற்பத்தி திறனை மேலும் மேம்படுத்தவும், உலக அரங்கில் தரமான இந்திய முறை மற்றும் ஹோமியோபதி மருந்துகளை தயாரிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
மருந்துகள் கட்டுபாட்டுத்துறையும், இந்திய மருத்துவதுறையும் சிறப்பாக வழிகாட்டி, மருந்து உற்பத்தியாளர்களை வழி நடத்தி செல்வதற்கு நன்றி தெரிவிப்பது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எ.யூ.எஸ்., அண்ட் எச் மருந்துகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் முழுமையான மருந்துகள், பரிசோதனை மையம் விரைவில் அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, அகமது, ராமலிங்கம், கார்த்திக், முகமதுரஷீத், நிஜார் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.